இந்திய மராட்டிய மாநிலத்தில் வீதி விபத்து – 11 பேர் பலி – பலர் காயம்!

Saturday, October 8th, 2022

இந்திய மராட்டிய நாசிக் நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேருந்து பயணிகள் பலியாகினர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பயணிகள் பேருந்து, பாரவூர்தி ஒன்றுடன் மோதியபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு வாகனங்களும் மோதிய நிலையில் பேருந்து தீப்பற்றிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பேரூந்தில் இருந்து பயணிகளை வெளியேற்றுவதில் சிரமங்கள் எதிர்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணமானவர்களில் ஒரு அகவை குழந்தையும் அடங்கியுள்ளது.

சம்பவத்தில் 32 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106