வன்முறைகளை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, October 5th, 2022

ஆர்ப்பாட்டங்கள் என்ற போர்வையில் நடைபெறும் வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்  பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வன்முறைச் செயல்கள் இடம்பெற்றால் மக்களின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர், அவ்வாறான செயல்களைத் தடுப்பதற்கு புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாகவும் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106