இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு இருபது போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி!

Wednesday, October 5th, 2022

இந்திய அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டியில் தென்னாபிரிக்க அணி 48 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 03 விக்கட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. Rilee Rossouw அதிகபட்சமாக ஆட்டமிழப்பின்றி 100 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு 228 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி 18.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 49 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக தினேஸ் கார்த்திக் 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

ஆட்டமிழப்பின்றி 100 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த தென்னாபிரிக்க அணியின் Rilee Rossouw போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவானதுடன், சூரியகுமார் யாதவ் தொடரின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

03 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு இருபது தொடரினை இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106