பெரும்போக விவசாயத்தின் சோள பயிர்ச் செய்கைக்கு தேவையான முதற்கட்ட யூரியா உரம் விநியோகம் – விவசாய அமைச்சு அறிவிப்பு!
Wednesday, October 5th, 2022
மூன்று மாவட்டங்களுக்கு பெரும்போக விவசாயத்தின் சோள பயிர்ச் செய்கைக்கு தேவையான 175,000 மெற்றிக் தொன் முதற் கட்ட யூரியா உரம் விநியோகிக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மொனராகலை, குருநாகல் மற்றும் அநுராதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான யூரியா விநியோக நடவடிக்கைகளே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் உத்தரவுக்கு அமைய, குறித்த 3 மாவட்டங்களுக்கான முதல் கட்ட யூரியா உரமானது, கொமர்ஷல் உர நிறுவனத்தின் ஊடாக விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மொனராகலைக்கு 75,000 மெட்றிக் டொன் யூரியா உரமும், குருநாகல் மாவட்ட 25,000 மெட்றிக் டொன் யூரியா உரமும், அநுராதபுரம் மாவட்டத்திற்கு 75,000 மெற்றிக்தொன் யூரியா உரமும் இதுவரை அனுப்பி வைக்கப்பட்டுள்தாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106