நள்ளிரவுமுதல் குறைக்கப்பட்டது எரிபொருள்களின் விலை !

Sunday, October 2nd, 2022

எரிபொருள் விலையை குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இந்த விலை குறைப்பானது கடந்த நள்ளிரவுமுதல் அமுலுக்கு வந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 40 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 450 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 410 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 30 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 540 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 510 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

இதேவேளை, இந்த விலைக்குறைப்புக்களுக்கு நிகராக தாமும் இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106