பாடசாலை மாணவர்களுக்காக போசணை மிகுந்த பிஸ்கட் – திரிபோஷா தொடர்பான சர்ச்சைக்கும் விரைவில் தீர்வு – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு!

Sunday, October 2nd, 2022

பிள்ளைகள் மற்றும் தாய்மார்களுக்கு உயர்தரம் வாய்ந்த போசணையான திரிபோஷாவை தொடர்ச்சியாக வழங்க சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் மற்றும் தாய்மாருக்கு வழங்கப்படும் திரிபோஷ உணவில் எஃப்லடொக்சின் எனும் புற்றுநோய் உண்டாக்கும் நச்சுப்பொருள் உள்ளடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

குறித்த பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

குறித்த தகவல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய உள்ளிட்ட தரப்பினர் சுகாதாரத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும் கூறுகையில்,“பிள்ளைகளக்கு மேலதிக போசணைகளை வழங்கும் தென்னாசிய நாடுகளில் இலங்கை முன்னிலையில் உள்ளது. திரிபோஷாவை தடையின்றி விநியோகிக்க போதுமான மானியத்தை திறைச்சேரி ஒதுக்கியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஒரு மாதத்தில் நாடளாவிய ரீதியில் ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் நிறை மற்றும் உயரம் மதிப்பிடப்படும். ஒருசில நாடுகளில் இவ்வாறான தன்மை கிடையாது.”என கூறியுள்ளார்.

இது தொடர்பில் திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன கருத்து தெரிவிக்கையில், “போசணையான திரிபோஷா உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

ஏனைய நிறுவனங்களை காட்டிலும் அரச நிறுவனங்களினால் உற்பத்தி செய்யப்படும் திரிபோஷாக்களில் அதிகளவில் சோளம் சேர்க்கப்படுவதாகவும் அதனால் எப்ளோடொக்ஷினின் வீதம் உயர்மட்டத்தில் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

அத்துடன் திரிபோஷா உற்பத்திக்காக 66 சதவீதம் சோளம் சேர்க்கப்படுவதுடன்,ஏனைய நிறுவனங்கள் அதற்கு பதிலாக மூலப்பொருட்களை சேர்ப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

எதிர்வரும் காலங்களில் 50 சதவீதம் சோளம் 50 சதவீதம் அரிசி ஆகியவற்றை சேர்த்து திரிபோஷா உற்பத்தி செய்யப்படும்.அதற்கு மேலதிகமாக பாடசாலை மாணவர்களுக்காக போசணை மிகுந்த பிஸ்கட் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எப்ளோடொக்ஷின் அடங்கிய திரிபோஷாக்கள் கடந்த நாட்களில் மீளப்பெற்றதாக வெளியான செய்தி அடிப்படையற்றதாகும். காலாவதியான திரிபோஷாக்கள் தான் அவ்வாறு மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டன.”என கூறியுள்ளார்.

இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய இலங்கையின் சுகாதார துறையை சிறந்த சேவையாக உலகம் குறிப்பிட வேண்டுமாயின் சுகாதார சேவை பாதுகாக்கப்பட வேண்டும்.

விசேடமாக திரிபோஷா தொடர்பிலான உண்மை தகவலை நாட்டுக்கும், உலகத்துக்கும் தெளிவுப்படுத்துவது அவசியமானது என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106