கொழும்பு – புறநகரில் சூரிய சக்தி படகு சேவை ஆரம்பம் – நாட்டின் உள் கால்வாய்கள் ஊடாக மேலும் பல படகு சேவைகளை ஆரம்பிக்க நகர அபிவிருத்தி அமைச்சு திட்டம்!!

Sunday, September 25th, 2022

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக சுற்றுச்சூழலுக்கு இணக்கமான, பயணிகள் படகு சேவை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை – ஹீனெடிகும்புர முதல் வெள்ளவத்தை வரை இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த படகு சேவையானது சூரிய சக்தி மூலம் இயக்கப்படுவது சிறப்பு அம்சமாகும்.

நாட்டின் உள் கால்வாய்கள் ஊடாக மேலும் பல படகு சேவைகளை ஆரம்பிக்க நகர அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

சூரிய சக்தி மூலம் செயல்படுவதால் இந்தப் படகுச் சேவைகளுக்கு எரிபொருள் செலவு ஏற்படாது என்றும், இதனால் ஒலி மாசு ஏற்படாது எனவும் கூறப்படுகிறது.

இந்த படகு சேவை தினசரி அலுவலக நேரங்களில் இயங்கும். படகொன்றில் எட்டு பேர் வரை பயணிக்க முடியும்.

பத்தரமுல்லை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள அரச மற்றும் தனியார் அலுவலகங்கள், சர்வதேச பாடசாலைகள், திறந்த பல்கலைக்கழகம், 176, 138, 122 பேருந்து வழித்தடங்கள் மற்றும் வெள்ளவத்தை தொடருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு இந்த படகு சேவை மூலம் இலகுவாக சென்றடைய முடியும் என நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106