உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்க சர்வஜன வாக்கெடுப்பு – புடினின் படையெடுப்பை நியாயப்படுத்துகின்றார் இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி!
Saturday, September 24th, 2022
உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலை அங்கீகரிக்கப் போவதில்லை என உக்ரைனும் அதன் நட்பு நாடுகளும் அறிவித்துள்ள நிலையில், இந்த வாக்கெடுப்பு மூலம் குறித்த பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவினால் சுயாட்சி கொண்டதாக அங்கீகரிக்கப்பட்ட உக்ரைனின் டொனெஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசுகளிலும் கெர்சன் மற்றும் ஷப்போறிஸ்ஷியா பிராந்தியங்களிலும் சர்வஜென வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.
கெர்சன் மற்றும் ஷப்போறிஸ்ஷியா பிராந்தியங்களை இதுவரை சுயாட்சி கொண்ட பகுதிகளாக ரஷ்யா அங்கீகரிக்காத நிலையில், குறித்த பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு சாதகமான முடிவுகளே சர்வஜென வாக்கெடுப்பு ஊடாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிராந்தியங்களை பாதுகாப்பதற்கு அணு ஆயுதத்தையும் பயன்படுத்துவதற்கு தமது நாடு தயாராக உள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் அதிபர் திமித்ரி மெத்வடேவ் கூறியுள்ளார்.
இதேவேளை உக்ரைன் மீதான ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினின் படையெடுப்பை இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி நியாயப்படுத்தியுள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பை மேற்கொள்ள விளாடிமீர் புடின் நிர்பந்திக்கப்பட்டார் என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106