சில உயர் அதிகாரிகளின் நடவடிக்கைகளே நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமைக்கான காரணம் – கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க குற்றச்சாட்டு!
Saturday, September 24th, 2022
சில உயர் அதிகாரிகளின் நடவடிக்கைகளினால் நாடு இன்று கடும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து நாட்டை அதள பாதாளத்திற்கு இட்டுச் சென்றதன் பிரதான பொறுப்பு சில உயர் அதிகாரிகளைச் சாரும் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில் –
நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் சில ஆலோசனைகள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு வழங்கப்பட்டது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், திறைசேரியின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோர் இவ்வாறு கோட்டாபயவை பிழையாக வழிநடத்தியவர்களில் முதன்மையானவர்கள்.
உயர் அதிகாரிகளின் செயற்பாடுகளினால் இறுதியில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியை விட்டு விலகவும், நாட்டை விட்டுச் செல்லவும் நேரிட்டது எனவும் சுட்டிக்காட்டியதுடன் நாடு இன்று கடும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அசர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106