பொருளாதார மீட்சி – அரசின் வேலைத்திட்டங்களுக்கு நியூசிலாந்து அரசு ஒத்துழைப்பு வழங்கும் – அமைச்சர் பிரசன்னவுடனான சந்திப்பில் நியூசிலாந்து தூதுவர் உறுதி!
Tuesday, September 20th, 2022பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் தற்போதைய வேலைத் திட்டத்துக்கு நியூசிலாந்து தன்னுடைய முழு ஆதரவை தெரிவித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் அப்பிள்டன் (Michal Appleton) ஆகியோருக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இது பற்றி தெரிவிக்கப்பட்டது.
இப் பேச்சுவார்த்தை நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் அலுவலகத்தில் நடந்தது.
இலங்கையின் நட்புறவு நாடாக இந்த நாட்டு மக்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு அவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்குவதற்கு எப்பொழுதும் நியூசிலாந்து தயாராக இருப்பதாக நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியூசிலாந்து உயர் ஸ்தானிகரிடம் நியூசிலாந்து சுற்றுலாப் பயணிகளுக்கு மத்தியில் இலங்கையை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலா மையமாக மேம்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதற்கு தனது உடன்பாட்டை தெரிவித்த உயர் ஸ்தானிகர் ஏற்கனவே அது சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
தற்போதைய அரசின் நிலை பற்றி உயர் ஸ்தானிகருக்கு இங்கு தெளிவுபடுத்திய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதோடு நாட்டுக்குள் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106