மின் கட்டண அதிகரிப்புக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையில் புதிய திட்டம் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Tuesday, September 20th, 2022

இலங்கையில் கடந்த மாதம்முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போதைய மின் கட்டண அதிகரிப்புக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையில் புதிய திட்டமொன்று தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் வைத்து இன்றையதினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.

சூரிய சக்தியிலான மின் உற்பத்தி அதன்படி, விகாரைகளுக்கும் ஏனைய மத வழிப்பாட்டுத் தலங்களுக்கும் சூரிய சக்தியிலான மின் உற்பத்தி முறைமையை பயன்படுத்துவதற்கு திட்டமொன்றை வகுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்பதாக நாடாளுமன்ற அமர்வு மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில் மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, மு.ப. 10.30 முதல் பி.ப. 5.30 வரை “தேசியப் பேரவையை” ஸ்தாபிப்பதற்கான தீர்மானம் விவாதிக்கப்பட்டது.

இதேவேளை நாடாளுமன்றில் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் இன்றுமுதல் திறக்கப்பட்டதாகவும் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்று நிலைமை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் நாடாளுமன்றை பார்வையிட இதுவரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பில் படைக்கல சேவிதரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் கடந்த 14ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதற்கமைய முதற்கட்டமாக நாடாளுமன்ற அமர்வு தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட நாடாளுமன்றத்தை பார்வையிட விரும்பும் தரப்பினருக்கு அனுமதியை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று முதல் நடைமுறை இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தொகுதிக்கு வருகைதர முடியும்.

இதற்கமைய, முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 3 மணிவரை அனுமதிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106