தொழில் திணைக்களத்தில் 2,015 தொழிற்சங்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன- தொழில் திணைக்களம் தெரிவிப்பு!
Sunday, September 18th, 2022தொழில் திணைக்களத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 15 தொழிற்சங்கங்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு பதிவு செய்யப்படாத தொழிற்சங்கங்கள் நடைமுறை செயற்பாடுகளில் ஈடுபட எந்தவொரு அடிப்படை அதிகாரமும் இல்லை என தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்ரகீர்த்தி தெரிவித்தார்.
கடந்த மாத ஆரம்பத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்களின் மொத்த எண்ணிக்கை 2005 ஆக காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் புதிதாக 10 தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொழிற்சங்கம் தொழில் திணைக்களத்திலேயே பதிவு செய்யப்பட வேண்டும்.
பதிவுசெய்யப்படும் தொழிற்சங்கத்தில், தாம் வேலைச்செய்யும் நிறுவனத்தின் சேவையாளர்களில் 40 சதவீதமானவர்கள் இருப்பார்களாயின், அதன் அடிப்படையிலேயே குறித்த தொழிற்சங்கத்தின் யாப்பு உருவாக்கப்படும்.
தொழில் திணைக்களத்தில் பதிவு செய்யாமல் செயற்படுவது சட்டத்திற்கு முரணானது. அவ்வாறு செயற்பட இடமில்லை.
பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட வேறு அலுவலகங்களில் வேறொரு அமைப்பாக பதிவு செய்துக் கொள்ளலாம் என தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்ரகீர்த்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106