ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா விஜயம் – பதில் அமைச்சர்களான இராஜாங்க அமைச்சர்கள்!
Sunday, September 18th, 2022மகாராணி 2ஆம் எலிசபெத்தின் இறுதி கிரியைகளில் பங்கேற்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா சென்றுள்ளார்.
இந்நிலையில், அவரின் கீழ் உள்ள அமைச்சுகளுக்கு, அதன் இராஜாங்க அமைச்சர்களை, பதில் அமைச்சர்களாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வசம் பாதுகாப்பு, நிதி, பொருளாதார உறுதிப்பாடு, தேசியக் கொள்கைகள், தொழில்நுட்பம், மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை , முதலீட்டு மேம்பாடு ஆகிய அமைச்சுகள் உள்ளன.
இந்நிலையில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பிரமித்த பண்டார தென்னகோனும், நிதி இராஜாங்க ஷெஹா சேமசிங்கவும், முதலீட்டு இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகமவும், தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராக கனக ஹேரத்தும் அண்மையில் நியமிக்கப்பட்டனர். அதற்கமைய, குறித்த இராஜாங்க அமைச்சர்கள், பதில் அமைச்சர்களாக கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106