தாமரைக் கோபுரத்தை பார்வையிட நேற்று 2612 பேர் வருகை – முதல் நாளிலேயே 15 இலட்சம் வருமானம் எனவும் தெரிவிப்பு!

Friday, September 16th, 2022

பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடத்தை பார்வையிடுவதற்கான டிக்கட் விற்பனை மூலம் நேற்று ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, முதல் நாள் வருமானம் 15 லட்சம் ரூபாவை அண்மித்திருந்ததாக தாமரைக் கோபுர தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று 2612 பேர் கொண்ட குழுவொன்று தாமரைக் கோபுரத்தை பார்வையிட வந்துள்ளதாகவும் அவர்களில் 21 வெளிநாட்டவர்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பேர வாவிக்கு அருகில் 30,600 சதுர மீற்றர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்ட தாமரைக் கோபுர கட்டிடம் நேற்றுமுதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

அதன்படி வார நாட்களில் பிற்பகல் 2 மணிமுதல் இரவு 11 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் பகல் 12 மணிமுதல் இரவு 12 மணி வரையிலும் தாமரைக் கோபுரத்தை தரிசிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106