கணினிக் கட்டமைப்பில் கோளாறு – வெளிவிவகார அமைச்சின் சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்பு பிரிவுகளின் சேவைகள் இடைநிறுத்தம்!
Friday, September 16th, 2022
வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைப் பிரிவின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்பு பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு 01 இல் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவிலும், யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, மாத்தறை மற்றும் குருநாகல் முதலான பிராந்திய அலுவலகங்களிலும் சரிபார்ப்பு மறறும் சான்றளிப்பு பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், குறித்த சேவைகள் மீள ஆரமப்பிக்கப்பட்டதும் பொதுமக்களுக்கு அறியப்படுத்தப்படும்.
எவ்வாறிருப்பினும், ஏனைய தூதரக சேவைகள் எவ்வித தடையுமின்றி இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், ஏனைய சேவை பெறுநர்கள், தங்களின் சேவைகளின் சாத்தியக்கூறுகள் குறித்து அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் கொழும்பு தூதரக சேவைப் பிரிவு 0112 33 88 12 அல்லது 0112 33 88 43 யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகம் – 021 22 15 970 திருகோணமலை பிராந்திய அலுவலகம் – 026 22 23 182 கண்டி பிராந்திய அலுவலகம் – 0812 38 44 10 குருநாகல் பிராந்திய அலுவலகம் – 0372 22 59 41 ஆகிய இலக்கங்களில் தொடர்புகொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106