இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அமைதியாக நினைவேந்த முடியும் – நிகழ்வுகள் அரசியல் நிகழ்ச்சி நிரலாகவோ இன ரீதியான கிளர்ச்சியைத் தூண்டுவதாகவோ இருக்கக்கூடாது – பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு!

Thursday, September 15th, 2022

போர்க்காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அவர்களை அமைதியாக நினைவேந்த முடியும் என தெரிவித்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்த்தன அந்த நிகழ்வுகள் அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதாகவோ அல்லது இன ரீதியான கிளர்ச்சியைத் தூண்டுபவையாகவோ இருக்கக்கூடாது என்றும் அவர்தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தல் நிகழ்வுகள் வரும்போது இன ரீதியான, மொழி ரீதியான, மத ரீதியான கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன.

அந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது என்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியாகவுள்ளார்.

இந்நிலையில் நினைவேந்தல்களை இறந்தவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அமைதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

அந்த நிகழ்வுகள் அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதாகவோ அல்லது இன ரீதியான கிளர்ச்சியைத் தூண்டுபவையாகவோ இருக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் கொடிகளைப் பயன்படுத்தியோ அல்லது அந்த அமைப்புக்களுக்கு புகழாரம் சூட்டியோ நினைவேந்தல் நிகழ்வுகளைக் கடைப்பிடிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் அவற்றை மீறினால் சட்டங்களுக்கமைவாக  நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106