தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு வாடகை அடிப்படையில் வாள் விநியோகம் – வட்டுக்கோட்டையில் 11 வாள்களுடன் ஒருவர் கைது!
Wednesday, September 14th, 2022
யாழ்ப்பாணப் பகுதியில் தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு வாடகை அடிப்படையில் வாள்களை விநியோகித்ததாக கூறப்படும் நபர் ஒருவர் யாழ். விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் நேற்று (13) இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூரிய முனைகள் கொண்ட 11 வாள்களை வைத்திருந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், குறித்த வாள்கள் பூசை வழிபாடுகளிற்கு பயன்படுத்தப்படுவதாக கைதான இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கைதான நபரின் தந்தை ஆலயமொன்றில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டு வருபவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக வாள்களுடன் சந்தேகநபர் வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106