ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி இன்று : கிண்ணத்தை வெல்லுமா இலங்கை!

Sunday, September 11th, 2022

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது தொடர் இன்று நடைபெறவுள்ளது.

இப்போட்டி டுபாய் மைதானத்தில் இன்று இரவு இலங்கை நேரப்படி 07.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி 05 தடவைகளும் பாகிஸ்தான் அணி 02 தடவைகளும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்றைய இறுதிப்போட்டிக்கு ஆர்வாத்துடனும், உற்சாகத்துடனும் காத்திருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர் ஒரு சிறந்த போட்டியில் ஏற்றத்தால்வுகள் இரக்கலாம் ஆனாலும் நாங்கள் இன்றைய பொட்டிக்கு தயாராகவே இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் போன்ற ஒரு சிறந்த கிரிக்கெட் அணிக்கு தலைவராக செயற்படுவது பெருமையளிப்பதாக பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

சுப்பர் – 4 சுற்றில் சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பொட்டியில் பாகிஸ்தான் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை பாபர் மீண்டும் சுட்டிக்காட்டினார்.

எங்கள் சுற்றுப் போட்டிகள் மிகவும் நெருக்கமாக இருந்தன, குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி. நசீம் அந்த சிக்ஸர்களை அடிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

அத்துடன், இன்றைய இறுதிப் போட்டி சிறப்பானதாக அமையும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்த பாபர் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிகளும், நாணய சுழற்சியில் வெற்றி பெறும் அணிகளும் பெரும்பாலும் இந்த தொடரில் வெற்றியை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டார்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106