எரிவாயு விநியோகத்தை ர’ஷ்யா ஆயுதமாகப் பயன்படுத்துகிறது – ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டை ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மறுப்பு!
Saturday, September 10th, 2022
நாட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடம் மூலம் தங்களுக்கு எரிவாயு விநியோகிக்கப்படுவதை நிறுத்திவைத்துள்ளதன் மூலம் உக்ரைன் விவகாரத்தில் எரிவாயு விநியோகத்தை நான் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டுகின்றன.
ஆனால், உண்மையிலேயே அந்த நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளால்தான் நாட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்ய முடியாமல் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேற்கத்திய நாடுகள் இப்போது அமோதித்தால் கூட, நாட் ஸ்ட்ரீம்-2 குழாய் வழித்தடம் மூலம் உடனடியாக எரிவாயு விநியோகம் செய்யத் தயாராக இருக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில், தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குச் சென்ற ரஷியப் படை, அந்தப் பிராந்தியத்தில் இன்னும் உக்ரைன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாகக் கைப்பற்றி வருகிறது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106