18 மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் நியமனம் – நியமனக் கடிதங்கள் பிரதமரினால் வழங்கி வைப்பு!

Saturday, September 10th, 2022

பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று முன்தினம் (08) வழங்கப்பட்டன.

நாடாளுமன்றத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் சாகர காரியவசம் எம்.பியும் இணைந்து கொண்டார்.

இதன்படி, 18 மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டதுடன், இதனபடிப்படையில்

கொழும்பு மாவட்டத்திற்கு – பிரதீப் உந்துகொடவும், கம்பஹா மாவட்டத்திற்கு – சஹான் பிரதீப் விதானவும், களுத்துறை மாவட்டத்திற்கு – சஞ்சீவ எதிரிமான்னவும், காலி மாவட்டத்திற்கு – சம்பத் அத்துகோரளவும், மாத்தறை மாவட்டத்திற்கு – நிபுன ரணவக்கவும், அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு – சமல் ராஜபக்ஷவும், குருணாகல் மாவட்டத்திற்கு – சமந்திரிய ஹேரத்ர்ம், புத்தளம் மாவட்டத்திற்கு – சிந்தக மாயாதுன்னேயும், அனுராதபுரம் மாவட்டத்திற்கு எச். நந்தசேனவும், கண்டி மாவட்டத்திற்கு – குணதிலக்க ராஜபக்ஷவும், மாத்தளை மாவட்டத்திற்கு – நாலக பண்டார கோட்டேகொடவும், நுவரெலியா மாவட்டத்திற்கு – எஸ்.பி. திஸாநாயக்கவும், பதுளை மாவட்டத்திற்கு – சுதர்சன தெனிபிட்டியவும், மொனராகலை மாவட்டத்திற்கு – குமாரசிறி ரத்நாயக்கவும், இரத்தினபுரி மாவட்டத்திற்கு – அகில எல்லாவலவும், கேகாலை மாவட்டத்திற்கு ராஜிகா விக்கிரமாசிங்கவும், திகாமடுல்லவுக்கு – டி. வீரசிங்கவும், திருகோணமலை மாவட்டத்திற்கு – கபில அத்துகோரளவும் நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106