பாகிஸ்தானில் கடும் மழை – பாரிய அனர்த்த நிலைமை குறித்து அந்நாட்டின் பிரதமர் ஷெபாஷ் ஷெரீபிற்கு, ஆறுதல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Sunday, September 4th, 2022

பாகிஸ்தானில் கடும் மழையினால் ஏற்பட்ட பாரிய அனர்த்த நிலைமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்நாட்டின் பிரதமர் ஷெபாஷ் ஷெரீபிடம் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமருடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்பாராத இயற்கை அனர்த்தத்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இலங்கை தொடர்ந்து ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக மனித உயிர்கள், கால்நடைகள் மற்றும் பல சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106