ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் இலங்கை அபார வெற்றி!
Sunday, September 4th, 2022
ஆசியக் கிண்ணத் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி நேற்று (3 ஆம் திகதி) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது.
குறித்த போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அறியை வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் குர்பாஸ் 45 பந்துகளில் 84 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் 176 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் பானுக ராஜபக்ச 14 பந்துகளில் 31 ஓட்டங்களை எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.
மேலும், நிஸ்ஸங்க 35 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும் தனுஷ்க குணதிலக 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இதேநேரம் சூப்பர் 4 சுற்றின் அடுத்த போட்டி எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதில் இலங்கை இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106