60,000 இளைஞர்களை கொன்று குவித்தவரின் மகனே சஜித் – சபையில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!

Saturday, September 3rd, 2022

தமிழர்களின் வீடுகளையும், சொத்துக்களையும் எரித்து 30 வருட யுத்தத்திற்கு வழி வகுத்தவரும், 60000 இளைஞர்களை கொன்று குவித்தவரும் தனது தந்தை பிரேமதாச என்பதனை மறந்து அடக்குமுறைகளைப் பற்றி அவரது மகனான சஜித் பிரேமதாச அதிகமாகவே பேசுவதாக அரச தரப்பு பிரதம கொறடாவும், அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதற்கெடுத்தாலும் ராஜபக்ச குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டும் எதிர்க்கட்சியினர் உக்ரைன் யுத்தத்தால் இதைவிட மோசமான பொருளாதார நிலைமையை எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரும் போதும் அதற்கும் ராஜபக்சர்கள் மீது தான் பழிபோடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106