அதிகரிக்கப்பட்டது மருத்துவ பரிசோதனை கட்டணம் – தேசிய மருத்துவ போக்குவரத்து நிறுவனம் தெரிவிப்பு!
Monday, August 8th, 2022
இன்றுமுதல் ஓட்டுனர் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது.
இதன்படி இலகுரக வாகனங்களுக்கான புதிய மருத்துவ பரிசோதனைக் கட்டணம் 1500 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கனரக வாகனங்களுக்கு சிறுநீர் பரிசோதனை தவிர புதிய மருத்துவ பரிசோதனை கட்டணம் 1,500 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுகின்றது.
000
Related posts:
யாழ் கடுகதி புகையிரதம் தாமதம்!
500 மில்லியன் பெறுமதியான வைர கல்லுடன் ஒருவர் கைது!
மன்னார் கனியவள ஆய்வின் எதிரொலி - தேசிய பெற்றோலிய, இயற்கை வாயு நிறுவனத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி!
|
|
|


