அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று இடம்பெறும் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
Monday, August 8th, 2022
இன்று திங்கட்கிழமைமுதல் அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று இடம்பெறும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
மேலும் அபராதம் கட்டுவதற்கான சீட்டுக்களை விநியோகித்தல், மதுபோதையில் வாகன ஓட்டுனர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை என்பன மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தற்சமயம் நாடு வழமையான நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில் பெருமளவிலான வாகனங்கள் சேவையில் ஈடுபடுகின்றதோடு வேலைக்காக செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார் .
000
Related posts:
இலங்கையர்களுக்கு இன்டர்போல் பிடிவிராந்து!
பிரதமரால் 2022 நாவலர் ஆண்டாக பிரகடனம் - அங்கீகாரக் கடிதம் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்...
எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி சிறப்பு விடுமுறை - வெளியான அறிவிப்பு!
|
|
|


