சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ பரிசோதனைக் கட்டணம் எதிர்வரும் திங்கட்கிழமை(08) முதல் அதிகரிப்பு!

Saturday, August 6th, 2022

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ பரிசோதனைக்கட்டணங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை(08) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மருத்துவ பரிசோதனை கட்டணம் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களின் விலை அதிகரித்துள்ளதால் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி, இலகுரக வாகனங்களுக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் 1,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கனரக வாகனங்களுக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம், சிறுநீர் பரிசோதனை தவிர்த்து 1500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது

000

Related posts:


மீன்குஞ்சுகளை குளத்திற்குள் விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - நன்னீர் மீன்பிடி சங்கங்கள்!
சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் இன்றுமுதல் வழமைக்கு திரும்பின - பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட ம...
எரிபொருள் - மின் பாவனையை சிக்கனப்படுத்த அரச நிறுவனங்களுக்கு பொது சேவைகள் அமைச்சு விடுத்துள்ள அறிவுறு...