குறைவடைகிறது லிட்ரோ சமையல் எரிவாயு விலை – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
Monday, August 1st, 2022
லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விற்பனை விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 5ஆம் திகதிமுதல் விலை குறைக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது, 12.5 கிலோகிராம் எடை கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 4,910 ரூபாவாக காணப்படுகிறது.
அத்துடன், 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் முறையே 1971 ரூபா, 914 ரூபாவாக காணப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அமைச்சின் செயலாளரை கைது செய்யுமாறு பிடியாணை!
2018 கல்வியாண்டின் உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல்!
கட்சித் தாவல் ஊடாக எந்த அரசியல் கட்சிகளையும் பலப்படுத்த முடியாது - நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத...
|
|
|


