தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாளைமுதல் நாடு முழுவதும் அமுலாகும் – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Sunday, July 31st, 2022

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாளைமுதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளது.

எனினும், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தங்களுக்கான ஒதுக்கத்தை பெற்றுக் கொள்வதற்காக ஒரு வார காலம் உள்ளமையினால் நெரிசல் ஏற்படாத வகையில் செயற்படுமாறு வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொது மக்களிடம் கோரியுள்ளார்.

இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை என்ற QR முறைமைக்கு இன்றுமுதல் வாகன வருமான அனுமதி பத்திரத்தை கொண்டு பதிவு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருளுக்கான QR முறைமைக்கு ச்செசி இலக்கத்தை கொண்டு பதிவு செய்ய முடியாத வாகனங்களை இவ்வாறு பதிவு செய்ய முடியும். QR முறைமை தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி குறித்த முறைமை முழுமையாக செயற்படுத்துவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமைக்காக, இதுவரையில் 46 இலட்சத்து 91 ஆயிரத்து 149 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 41 இலட்சத்து 59 ஆயிரத்து 357 வாகனங்கள் பெற்றோலுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதோடு 5 இலட்சத்து 32 ஆயிரத்து 571 வாகனங்கள் டீசலுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, சகல முச்சக்கரவண்டிகளையும் அந்தந்த காவல்துறை நிலையங்களில் பதிவு செய்து, அவற்றுக்காக அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை ஒதுக்கி கொள்ள வேண்டும்.

இந்தநிலையில் இன்றையதினம் வாகன இலக்க தகடுகளில் 3,4 மற்றும் 5 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது..

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106