ஆறு மாத காலத்தில் 428 முறைப்பாடுகள் – சொத்து மோசடி தொடர்பில் 42 பதிவுகள் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு தெரிவிப்பு!
Friday, July 29th, 2022
இந்த வருடத்தின் ஆறுமாதகாலத்திற்குள் இலஞ்ச ஊழல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் 428 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் 386 முறைப்பாடுகளும் சொத்துக்கள் தொடர்பில் 42 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாகவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கிணங்க இதுவரை 22 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முறைப்பாடுகளை பொதுமக்கள் மேற்படி ஆணைக்குழுவில் முன்வைக்கமுடியும் என தெரிவித்துள்ள அந்த அதிகாரி 1954 அல்லது 011- 2584872 ஆகிய தொலைபேசி இலக்கத்திற்கும் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கடந்த 15 நாட்களுக்குள் 1311 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு - சுகாதார அமைச்சு!
எதிர்வரும் 21 ஆம் திகதிவரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
பொது கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவன்ன நியமனம்!
|
|
|


