முதலாம் திகதிமுதல் பாடசாலை மாணவர்களுக்காக தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தி, புதிய பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை!
Thursday, July 28th, 2022
எதிர்வரும் முதலாம் திகதிமுதல் பாடசாலை மாணவர்களுக்காக தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தி, புதிய பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போது காணப்படும் போக்குவரத்து சிக்கல் மற்றும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது அனைத்து பாடசாலைகளும் உள்ளடங்கும் வகையில் பாடசாலை ஆரம்பமாகும் நேரம் மற்றும் நிறைவடையும் நேரம் என்பனவற்றை கவனத்திற்கொண்டு இந்த புதிய பேருந்து சேவை முன்னெடுக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அனைத்து பாடசாலைகளும் தற்போது இயங்கும் முறையில் தொடர்ந்தும் இயங்கும் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
சீன மக்கள் இராணுவத்திற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச!
லெபனான் பேஜர் தாக்குதல்களை ஒப்புக் கொண்ட இஸ்ரேலிய பிரதமர்!
|
|
|


