‘குடு’ காரர்களே காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர் – கட்டுப்படுத்துவதற்கு அவசரகால சட்டம் அவசியம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
Thursday, July 28th, 2022
குடு காரர்களே தற்போது காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர் எனவே இவர்களை கட்டுப்படுத்துவதற்கு அவசரகால சட்டம் அவசியம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், காலி முகத்திடல் என்பது பொருளாதார கேந்திர நிலையம். சுற்றுலாத்துறையுடன் சம்பந்தப்பட்ட பகுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அங்கிருந்து போராட்டக்காரர்கள் அகற்றப்பட வேண்டும் எனவும், அவர்களுக்கு மாற்று இடங்களை வழங்கலாம் எனவும் அமைச்சர் யோசனை ஒன்றினையும் முன்வைத்துள்ளார்.
போராட்டக்காரர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள், படையினரை படுமோசமாக விமர்சித்தனர். படையினரைவிட பிரபாகரன் சிறந்தவர் என்றுகூட குறிப்பிட்டனர்.
இது குறித்து பொன்சேகாவின் நிலைப்பாடு என்ன எனவும் பிரசன்ன ரணதுங்க கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106