இங்கிலாந்தில் உச்சமடையும் வெப்பம் – வறட்சியை நோக்கி சென்றுகொண்டிருந்த பகுதிகள் தற்போது மோசமான நிலையை எட்டியுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவிப்பு!
Wednesday, July 27th, 2022
இங்கிலாந்தில் தற்போது அதீத வெப்பமும், வறண்ட காலநிலையும் நிலவி வருகிறது. மேலும், போதுமான அளவு மழையும் பெய்யவில்லை. இதே நிலை தொடரும் நிலையில், இங்கிலாந்தில் சில பகுதிகள் வறட்சியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் அதிக வெப்பநிலை தொடர்ந்து நிலவிவருவதால், புற்கள் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. ஆறுகளில் நீரோட்டம் குறைந்து கானப்படுகிறது.
ஒரு சில குளங்கள் முற்றிலும் வற்றிய நிலையில் காணப்படுகின்றது. இதுவரை இல்லாத அளவு கடந்தவாரம் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை எட்டியதால், ஏற்கெனவே வறட்சியை நோக்கி சென்றுகொண்டிருந்த பகுதிகள் தற்போது மோசமான நிலையை எட்டியுள்ளதாக இங்குள்ள சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல்; 70 பேர் பலி
ஏப்ரல் 19 ஆம் திகதி தேர்தல் - பிரசாரங்கள் ஏப்ரல் 17 ஆம் திகதியுடன் நிறைவடைய வேண்டும் என அறிவுறுத்து!
பங்களாதேஷை பாகுபாடற்ற நாடாக மாற்ற ட்ரான்ஸ்ரேன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் வலியுறுத்து!
|
|
|


