தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் பிரதமர் தினேஷ் குணவர்தன!
Monday, July 25th, 2022
புதிய பிரதமராக பதவியேற்ற தினேஷ் குணவர்தன இன்று திங்கட்கிழமை காலை உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 22ஆம் திகதி பதவியேற்றதை அடுத்து புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 27வது பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தினேஷ் குணவர்தன, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 26 வது பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரத்திற்கு பின்னர், இலங்கையில் சில அரசியல்வாதிகள் இரண்டுக்கும் மேற்பட்ட தடவைகள் பிரதமராக பதவி வகித்துள்ளனர். இதனடிப்படையில் தினேஷ் குணவர்தன 26 வது பிரதமர் என அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய குறிப்பிடப்படுகிறார்.
எனினும் தினேஷ் குணவர்தனவுடன் சேர்த்து இலங்கையில் 16 பேரே பிரதமராக பதவி வகித்துள்ளனர். இவர்களில் ரணில் விக்ரமசிங்க 5 முறை பிரதமராக பதவி வகித்துள்ளார்.
இலங்கையின் முதலாவது பிரதமர் டொன் ஸ்டீபன் சேனாநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல, எஸ்.டப்ளியூ. ஆர்.டி. பண்டாரநாயக்க, விஜயானந்த தஹாநாயக்க, ஜே.ஆர். ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரட்ணசிறி விக்ரமநாயக்க, டி.எம். ஜயரத்ன ஆகியோர் ஒரு முறை மாத்திரம் பிரதமராக பதவி வகித்துள்ளனர்.
இதேவேளை இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ் சேனாநாயக்கவின் புதல்வரான டட்லி சேனாநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க மகிந்த ராஜபக்ச ஆகியோர் மூன்று முறை பிரதமராக பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106