ஜனாதிபதி மாளிகையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்ய பல கோடி செலவு – பெறுமதிமிக்க சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிப்பு!
Saturday, July 23rd, 2022
ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட மேல் தளத்திற்கு செல்லும் படிகளை புனரமைக்க பத்து கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது, மேல் மாடிக்கு செல்லும் தொல்லியல் மதிப்புள்ள படிக்கட்டு சேதமடைந்துள்ளதால், அதனை புதிதாக சீரமைக்க வேண்டும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த படிகள் தொல்லியல் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் புனரமைக்கப்பட உள்ளது.
இங்குள்ள தொல்லியல் பெறுமதிமிக்க ஏனைய சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கிட முடியாத நிலையே உள்ளது என அதிகாரிகள் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அடுத்த ஆண்டு துறைமுக நகரின் காணிகள் ஏல விற்பனைக்கு - அமைச்சர் சம்பிக்க ரணவக்க!
இலங்கை வான்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட 3 விமானங்கள்!
ஜனாதிபதி ஆர்வம் : சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் அர்ப்பணிப்பு - தடுப்பூசியில் வல்லரசு நாடுக...
|
|
|


