இன்று 25 நிரப்பு நிலையங்களில் எரிபொருள் அனுமதி அட்டை பரீட்சிப்பு – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Saturday, July 23rd, 2022

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையானது நேற்று கொழும்பில் இரண்டு இடங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துன் இன்று(23) நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் தெரிவு செய்யப்பட்ட 25 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையின் கீழ் எரிபொருள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சார்த்த நடவடிக்கையின் பின்னர் தேசிய மட்டத்தில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலக்கத் தகடுகளில், 0, 1 மற்றும் 2 ஆகியவற்றை இறுதி இலக்கங்களாக கொண்ட வாகனங்களுக்கு இன்று எரிபொருள் விநியோகிகப்படவுள்ளது.

நேற்றைய தினம் பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டது. எனினும் சில பகுதிகளில் அமைதியின்மை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இதேநேரம், மற்றுமொரு பெற்றோல் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதோடு அதன் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

மின்சார சபைக்கு ஒரு வாரத்திற்கு எரிபொருள் வழங்குவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதி!
மின் , வலுசக்தி மறுசீரமைப்புக்கள் தொடர்பில் அமெரிக்க திறைசேறி துணை உதவி செயலாளருக்கு விளக்கமளிப்பு!
பொதுமக்களின் அமைதியை உறுதிசெய்ய ஆயுதம் தாங்கிய படையின் சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதா...

அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான தற்காலிக அடையாள அட்டை - தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையா...
வாழ்வாதார உழைப்புக்களை இழந்த குடும்பங்களுக்கு மே மாதமும் 5 ஆயிரம் ரூபா நிவாரண உதவி – இன்றுமுதல் நடைம...
பாடசாலை வசதிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது - அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின...