5 மாதங்களுக்குள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண முடியும் – மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

Thursday, July 21st, 2022

எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை காணமுடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சீ.என்என் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் – இலங்கையிடம் தெளிவான திட்டம் மற்றும் தெளிவான பாதை உள்ளது. அதனை பின்பற்றுவதன் ஊடாக இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு எதிர்வரும் 5 மாதங்களில் தீர்வு காண முடியும்.

அதுவரை கடினமாக காலமாக அமையும். எவ்வாறாயினும், ஒளியை காணக்கூடிய சுரங்கத்தின் விளிம்பினை அடைந்துள்ளோம்.

எனவே, மக்கள் பொறுமையுடன் செயற்பட வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106