விமான விபத்தில் இருவர் பலி!
Friday, August 26th, 2016
பிரான்ஸில் சிறிய விமானம் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸில் உள்ள Savoy என்ற நகரில் இரண்டு இருக்கைகள் மட்டுமே உள்ள ஒரு சிறிய விமானம் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக பறந்துள்ளது.
அப்போது, தாழ்வாக பறந்த அந்த விமானம் மரத்தின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. விமான விபத்தை அந்நகர மேயரான Christian Rochette என்பவர் உறுதிப்படுத்தியுள்ளார். ‘Saint-Remy-de-Maurienne ஓடுதளத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த இருவருமே உயிரிழந்துள்ளதாக’ மேயர் தெரிவித்துள்ளர்.
சிறிய விமானம் விபத்துக்குள்ளாகி இருவர் பலியாகியுள்ளது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106