கணித விஞ்ஞான பிரிவில் கற்கும் மாணவர்களது எண்ணிக்கை 40 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை! – வடமபகாண கல்வி அமைச்சின் செயலாளர் இரவீந்திரன்
Friday, March 25th, 2016
கணித, விஞ்ஞான பிரிவுகளில் கற்கும் மாணவர்களது எண்ணிக்கையை 40 வீதமாக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்
வலிகாமம் கல்வி வலயத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவானது வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா தலைமையில் அண்மையில் இடம்பெற்ற போது அந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது
தரம் 6– ஆம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டு வரையான வகுப்புகளுக்கு கற்பிப்பதற்கான கணித,-விஞ்ஞான, ஆங்கில பாட ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும் பட்டதாரிகள் 40தொடக்கம் -50 பேர் வரையிலாவது வருவார்களா எனும் சந்தேகம் காணப்படுகின்றது. இவ்வகையில் கணித, -விஞ்ஞான துறையினை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன
இதேவேளை அதிபர்கள், ஆசிரியர்கள் உங்களது பிள்ளைகளினை சரியாக வழிப்படுத்துங்கள். ஆசிரியர்கள் வகுப்பறைக்கு செல்லாமையினால் தான் பல்வேறு பிரச்சினைகள் உருவாகின்றன. பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர் பிரச்சினைகளினை தீர்ப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது
வலயங்களுக்குள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும். அந்த வகையில் வலிகாமம் கல்வி வலயத்திற்கு பௌதீக வளத்தினை பூர்த்தி செய்யும் வகையில் குறித்த கட்ட டம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது என வும் தெரிவித்தார்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண கல்விப்பணிப்பாளர் செ.உதயகுமார் உரையாற்றுகையில் புதியகட்டட திறப்புவிழாவின் மூலம் வலிகாமம் வலயத்தின் பௌதீக வளத்தின் ஒருபகுதி பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் அதிக மாண வர்களினை கொண்ட வலயமாக இவ்வலயம் காணப்டுகின்றது. வடமாகாணத்தின் பெறுபேற்றினை நிர்ணயிக்கின்ற வலயமாகவும் இது காணப்படுகின்றது
இன்று பல நிலங்கள் விடுவிக்கப்பட்டு அவ்விடங்களில் பாடசாலைகள் மீளவும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் கல்வி நடவடிக்கைகள் மேலும் விருத்தியடையும் எனத் தெரிவித்தார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106