லங்கா ஐஓசி இன்று 100 எண்ணெய் தாங்கிகளில் 1.5 மில்லியன் லீற்றர் பெற்றோல் மற்றும் டீசல் என்பவை விநியோகம்!
Monday, July 11th, 2022
லங்கா ஐஓசி இன்று 100 எண்ணெய் தாங்கிகளில் 1.5 மில்லியன் லீற்றர் பெற்றோல் மற்றும் டீசல் என்பவை விநியோகிக்கப்பட்டுள்ளது.
இவற்றை விநியோகிக்கும் பொழுத நோயாளர் காவுவண்டிகளுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக லங்கா ஐஓசி அறிவித்துள்ளது.
இதேவேளை டீசல் தாங்கிய எரிபொருள் தாங்கி ஊர்தி ஒன்று ஹப்புத்தளை பகுதியில் இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
திருகோணமலை எரிபொருள் முனையத்தில் இருந்து ஹப்புத்தளை நோக்கி பயணித்த போதே இன்று காலை இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான குறித்த எரிபொருள் தாங்கி ஊர்தியில் 33,000 லீற்றர் டீசல் இருந்ததாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
Related posts:
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக மக்கள் குற்றச்சாட்டு!
ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான புதிய வழிகாட்டுதல் - ஜனாதிபதி செயலாளரினால் மற்றுமொரு வர்த்தமான...
இலங்கையின் வனப்பகுதி 16 வீதமாக குறைந்துள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை - வனப்பாதுகாப்பு திணைக்களம...
|
|
|


