ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான புதிய வழிகாட்டுதல் – ஜனாதிபதி செயலாளரினால் மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
Thursday, November 25th, 2021
ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.
குறித்த வர்த்தமானியில் , 14 பிரிவுகளும், 8 உப பிரிவுகளும் அடங்குகின்றன.
ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்படுபவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் தொடர்பான விபரங்கள் அந்த வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், வருடாந்தம் 10க்கும் மேற்படாதவாறு ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதவிவழி அடிப்படையில், அரச சட்ட அதிகாரிகளை ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கும்போது, இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் கவனத்திற்கொள்ளப்பட மாட்டாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
புனரமைக்கப்பட்ட கிரேன்ட் ஒரியன்டல் ஹோட்டல் பிரதமரின் தலைமையில் திறந்து வைப்பு!
ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 16 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு – சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்...
கிறிக்கெற் சபைக்கான இடைக்கால குழு மற்றும் வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம...
|
|
|


