இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலையில் மீண்டும் அதிகரிப்பு!
Monday, July 11th, 2022
லிட்ரோ எரிவாயு 12.5 கிலோகிராம் கொள்கலனின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்றுமுதல் இந்த விலையதிகரிப்பு நடைமுறைக்கு வருவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி லிட்ரோ 12.5 கிலோ கிராம் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 4,910 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 5 கிலோகிராம் மற்றும் 2.5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என்பதுடன் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கைதுசெய்யுமாறும் பொலிஸாருக்கு உத்த...
யாழ்ப்பாணத்தில் காலவரையறையின்றி மூடப்படும் தனியார் கல்வி நிலையங்கள்!
பல மாகாணங்களிலும் மழை - பலத்த காற்றும் வீசும் - வளிமண்டலவியல் திணை எதிர்வுகூறல்!
|
|
|


