உரிய திகதியில் ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் நாடுமுழுவதும் வேலைநிறுத்தம் –ஹர்த்தால் – தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் அறிவிப்பு!
Sunday, July 10th, 2022
எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகாவிட்டால், அறிவித்தல் இன்றி வேலைநிறுத்தம் மற்றும் முழு கடையடைப்பில் ஈடுபடப் போவதாக இன்று (10) தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் அறிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்க காரியாலயத்தில் இன்று (10) நடைபெற்ற தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நேற்று பிற்பகல் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் தீர்மானங்களுக்கு மதிப்பளித்து, எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதியினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டது
000
Related posts:
நாட்டின் அனேக பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை - வளிமண்டலவியல் திணைக்களம்!
ரஷ்ய வழங்கிய கடனை எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்த இலங்கை நடவட...
அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்காக நாணயக் கடிதத்தை விடுவிக்கத் தீர்மானம் - சுகாதார அமைச்சர் சன்ன ஜ...
|
|
|
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது பகுதி நவம்பர் 15 ஆம் திகதிக்குள் பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப...
வீசா இன்றி அவுஸ்திரேலியா வர முயற்சிப்பவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவர் - ...
அல்லைப்பிட்டியில் பேருந்தை வழிமறித்து சாரதி மீது கடும் தாக்குதல் - பொலிசார் நடவடிக்கை எடுக்க தவறின் ...


