நாட்டின் அனேக பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்!
Friday, August 16th, 2019
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
Related posts:
பாதிக்கப்பட்ட அரச உத்தியோகஸ்தர்களுக்கு விசேட விடுமுறை!
பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு இந்தியாவின் பங்களிப்பு அதிகமிருக்கும் - இலங்கைக்கான ...
இந்தியா, சீனா வழங்கும் ஒத்துழைப்புகளை ஒருபோதும் மறக்க முடியாது - நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் த...
|
|
|


