ஒப்பந்த சேவையாளர்களின் சேவை காலத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை நீடிக்க தீர்மானம் – அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவிப்பு!
Tuesday, July 5th, 2022
உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களில் பணியாற்றும் வெளிவாரி மற்றும் ஒப்பந்த சேவையாளர்களின் சேவை காலத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, அந்த பணியாளர்களின் சேவை காலத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை நீடிக்கும் வாய்;ப்பு நிறுவன பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
புதிய வரி அறவீட்டு முறைமை ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு!
நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட மாட்டோம் - இது நாட்டை சீர்குலைக்கும் முயற்சி - சுயாதீனமாக ச...
தரம் ஐந்திற்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை – வடக்கில் 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்றுவதாக மாகாண க...
|
|
|


