இந்திய வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுக்கு அமைச்சர் தம்மிக்க பெரேராவினால் 5 வருட விசா கையளிப்பு – இந்திய உயர்ஸ்தானிகராலயம் வரவேற்பு!
Sunday, July 3rd, 2022
அமைச்சர் தம்மிக்க பெரேராவினால் இலங்கையிலுள்ள இந்திய வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுக்கு 5 வருட விசா கையளிக்கப்பட்டுள்ளமையானது, இலங்கையில் முதலீடுகளை மேம்படுத்தவும் இலகுவாக வர்த்தக நடவடிக்கைககளை மேற்கொள்ளவும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும் என்று இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
நாட்டில் வெளிநாடு முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் வீசாக்களின் காலத்தை 5 ஆண்டுகள் வரை நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அண்மையில் அமைச்சர் அமைச்சர் தம்மிக்க பெரேரா அறிவித்திருந்தார்.
அத்தோடு தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்லவிருப்போரிடம் , உரிய ஆவணங்கள் அனைத்தும் காணப்படுமாயின் அவர்களுக்கு விரைவில் கடவுச்சீட்டு வழங்கப்படும் என்றும் , ஒருநாளை சேவையில் இவற்றை வழங்குவதற்கு பிரத்தியேக கரும பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே நேற்று சனிக்கிழமை இலங்கையிலுள்ள இந்திய வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுக்கு 5 வருட வீசா , அமைச்சர் தம்மிக பெரேராவினால் கையளிக்கப்பட்டது.
இதற்கு வரவேற்பு தெரிவித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106