எரிபொருள் பிரச்சினைக்கு 10 நாட்களுக்குள் தீர்வு – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, July 3rd, 2022

எரிபொருள் பிரச்சினைக்கு அடுத்த 10 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்பட்ட பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று மாலை ஜனாதிபதியை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது நாட்டில் தற்போது பெரும் பிரச்சனையாக மாறியிருக்கும் எரிபொருள், எரிவாயு உட்பட சமகால பிரச்சினைகள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போதே எரிபொருள் பிரச்சனைக்கு இன்னும் 10 நாட்களில் தீர்வு பெற்றுதருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குறுதி அளித்துள்ளார்.

இவ் வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் 10 நாட்களுக்கு பொறுமையாக, இருப்பதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

எம் மீது அபர்த்தமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன - அடியோடு நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டபய ர...
மின் கட்டண சலுகைகளுக்கு தகுதியானவர்களை இனங்காண அரசாங்கம் நடவடிக்கை - அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெர...
நாளை நள்ளிரவுடன் பிரசார பணிகளுக்கு தடை - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவிப்பு!