பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு முன்மாதிரியாக கட்சி உறுப்பினர்கள் விளங்க வேண்டும் – வவுனியாவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, June 28th, 2022

விவசாயம், வீட்டுத் தோட்டம் போன்ற சுயதொழில் முயற்சியில் ஈடுபடுவதன் மூலம் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு முன்மாதிரியாக கட்சி உறுப்பினர்கள் விளங்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், ஈ.பி.டி.பி. கட்சியானது, தேசிய நீரோட்டத்தில் இணைந்த காலத்தில் இருந்து, தேசிய நல்லிணக்கத்தின் மூலம் சாணக்கியமாக பல்வேறு அரசியல் வெற்றிகளை பெற்று வருவதாகவும்,

இதே நடைமுறையினை பயன்படுத்தி எதிர்காலத்திலும் எமது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே

டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்தில் பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதில் காணப்பட்ட நடைமுறை பிரச்சினைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புதிய நடைமுறைகள் சிலவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.

Related posts:


புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவையில் ஒரே ஒரு தமிழ் பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா ...
வலை உற்பத்தி தொழிற்சாலை செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் த...
“நீ கூறுகிறாய் இறந்துவிட்டாயாம் நீ" - நூல் வெளியீட்டு நிகழ்வில் பங்குபற்றவுள்ளார் அமைச்சர் டக்...