எரிபொருள் வரிசையில் காத்திருப்போருக்கு டோக்கன் வழங்க நடவடிக்கை – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Monday, June 27th, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருப்போருக்கு இன்று (27) முதல் டோக்கன் (Token) வழங்கப்படவுள்ளது.
அந்தந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரம் தனித்துவமான டோக்கன்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்..
இதற்கென இராணுவம் மற்றும் பொலிஸாரை கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
இதேவைளை தொலைபேசி இலக்கங்களை பெற்றுக்கொண்டு டோக்கன்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்..
Related posts:
பட்டினி ஒழிப்பு பட்டியலில் இலங்கை முன்னேற்றம்!
யாழ்ப்பாணம் நீரியல் வள திணைக்களத்துக்கு ஆளணி பற்றாக்குறை!
ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த குற்றத்தில் இதுவரை 62 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது - பொலிசார் தெரிவிப...
|
|
|


