பயன்படுத்தப்படாத வயல்கள் மற்றும் காணிகளை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பம்!
Friday, June 24th, 2022
உணவு நெருக்கடிக்கு தீர்வாக அரசாங்கத்தால், பயன்படுத்தப்படாத வயல்கள் மற்றும் காணிகளை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தும் விசேட வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல்மாகாணத்தில், காணி மீட்பு கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ள அடையாளம் காணப்பட்ட 283 ஏக்கர் நிலப்பரப்பு பயிர்ச்செய்கை நடவடிக்கைகாக ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஏற்படவுள்ள உணவு நெருக்கடிக்கு தீர்வாக குறித்த காணிகளில் பயிர்ச் செய்கை திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் இதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிலியந்தலை, கெஸ்பேவ, பெப்பிலியான, நாவின்ன, போக்குந்தர மற்றும் பில்லேவ முதலான பிரதேசங்களில் இந்தக் காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நீரில் மூழ்கும் யாழ்ப்பாணம் விமான நிலையம் !
வெளிவிவகார அமைச்சின் நான்காவது பிராந்திய தூதரக அலுவலகம் திருகோணமலையில் திறப்பு!
சாவகச்சேரியில் இன்று பிறந்த குழந்தை ஒன்று கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!
|
|
|


