இலங்கை அணி 26 ஓட்டங்களால் வெற்றி!

Friday, June 17th, 2022

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.4 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 220 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி சில மணிநேரம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், டக்வத் லூயிஸ் முறைமைக்கு அமைய போட்டி 43 ஓவர்களளுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

அதன்படி, அவுஸ்திரேலிய அணிக்கு 216 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணிசார்பில் அதிகபடியாக குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 34 ஓட்டங்களையும், தசுன் சானக்க 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ் 35 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

216 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 37.1 ஓவர்கள் நிறைவில் கசல விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அணிசார்பில் அதிகபடியாக டேவிட் வோர்னர் 37 ஓட்டங்களையும், க்ளென் மெக்ஸ்வெல் 30 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் சாமிக்க கருணாரத்ன 47 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், துனித் வெல்லாலகே 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிரந்தமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106